உலகிலேயே உயரமான சாலை லடாக்கில் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
லடாக்கில் லே பகுதியையும் பாங்காங் ஏரியையும் இணைக்கும் 18 ஆயிரத்து 600 அடி உயரத்தில் அமைந்த உலகிலேயே உயரமான சாலை நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந்திய ராணுவத்தின் அம்பத்தி எட்டு என்ஜினியர் பிரிவு அமைந்துள்ள சாலையில் கேலா கணவாய் வழியாக செல்லக்கூடியது. இந்த சாலையை லடாக் மாநிலத்தின் எம்.பி. ஜம்யாங் செரிங் நம்கியால் திறந்து வைத்தார்.
இந்த சாலையை லடாக் இயம்பி ஜம்யங் ட்செரிங் நம்ஜியால் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதற்கு முன் கூட்டி 18 ஆயிரத்து 380 அடி உயரத்தில் அமைந்த, கர்துங்லா கணவாய் சாலைதான் உலகிலேயே உயரமான வாகன சாலையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.