விமான நிலையத்தில் அதிக அளவு சிகரெட் பாக்கெட்களை வைத்திருந்த முதியவர் ஒருவர் சுங்க அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.
பிரித்தானியாவில் உள்ள Rugby நகரை சேர்ந்தவர் 56 வயதான Bojkin. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு Slovakiaவில் இருந்து பிரித்தானியா வந்துள்ளார். அப்போது luton விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் Bojkinனை தடுத்து நிறுத்தினர். ஏனெனில் அவரது சூட்கேசில் சிறிய ரக சிகரெட் பாக்கெட்கள் அதிகமாக இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். எனவே அதனை சோதனை செய்து பார்த்த பொழுது மொத்தம் 19, 840 சிகரெட்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரிகள் Bojkinனிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் கூறியதாவது “இந்த சிகரெட் பாக்கெட்களை எனக்கும் எனது குடும்பத்தின் பயன்பாட்டிற்காகவும் வாங்கியுள்ளேன். நான் சிகரெட்களை விற்பனை செய்யும் நோக்கத்திற்காக வாங்கவில்லை” என்று கூறியுள்ளார்.
குறிப்பாக இந்த சிகரெட்களை சட்ட முறைப்படி நாட்டிற்குள் வணிக பயன்பாட்டிற்காக கொண்டு வரும் பொழுது 5,817.78 பவுண்ட் வரியாக செலுத்த வேண்டும். இதற்கிடையில் மேலும் இது குறித்து Bojkin கூறியதில் ” நான் அறுவை சிகிச்சை செய்து கொண்டு, மருத்துவ சிகிச்சைக்காக பிரித்தானியா திரும்பியுள்ளேன். குளிர்காலத்தை பிரித்தானியாவிலும் , கோடைகாலத்தை Slovakiaவிலும் செலவிடுவேன். அதிலும் 2008 ஆம் ஆண்டு முதல் பிரித்தானியாவில் வசித்து வருகிறேன். ஆனால் Slovakiaவிற்கு சென்று வருவது எனது வழக்கமான ஓன்று” என்று கூறியுள்ளார். இதனையடுத்து அவரை நீதிமன்றத்தில் இந்த வாரம் அதிகாரிகள் ஆஜர்படுத்தப்படுத்தினர். அவர் நீதிமன்றத்தில் கூறியதில் “நானும் என் மனைவியும் நாளொன்றுக்கு 5 பாக்கெட் சிகரெட்டுகளை புகைப்போம்.
மேலும் Slovakiaவில் சிகரெட் விலை மலிவு என்பதால் அதிக அளவு சிகரெட்டுகளை வாங்கினேன். இதனை விற்பனை செய்வதற்காக வாங்கி வரவில்லை. நான் இது போன்று குளிர்காலத்தில் மொத்தமாக சிகரெட்களை வாங்கி வைப்பது வழக்கம். இது ஐந்து மாதங்கள் வரை நீடிக்கும்” என்று கூறியுள்ளார். ஆனால் அவர் சிக்குவது இது முதல் தடவை அல்ல. இதற்கு முன்பாக பலமுறை சிகரெட் பாக்கெட்டுகள் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து 2 மணி நேர விசாரணைக்கு பிறகு Bojkinனை குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்தது. எனினும் தீர்ப்பு வழங்கும் நாளானது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கிடையில் Bojkinனுக்கு ஜாமீன் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.