Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இதனை அனுமதிக்க கூடாது…. வியாபாரிகள் சங்கத்தினரின் மனு…. ஆட்சியருக்கு விடுத்த கோரிக்கை….!!

பொதுக்குழு கூட்டத்தை தடுக்கக்கோரி நேதாஜி மார்க்கெட்டின் காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள நேதாஜி தினசரி மார்க்கெட்டின் காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் 30-க்கும் மேற்பட்டோர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு திரண்டு வந்து புகார் மனு ஒன்றைக் அளித்துள்ளனர். அந்த மனுவில் இருப்பதாவது, எங்கள் சங்கத்தில் 807 நபர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். கடந்த 2014-ஆம் ஆண்டு சங்க தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தற்போது பொறுப்பாளராக இருக்கின்றனர். இவர்கள் வீடு கட்ட மனை கொடுக்கும்  திட்டத்தை தொடங்கி, சங்க உறுப்பினர்கள் 700 நபர்களிடம் தலா 70 ஆயிரம் ரூபாய் வாங்கி இருக்கின்றனர். இதனையடுத்து நசியனூர் பகுதியில் 20 1/2 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு சங்க அறக்கட்டளை ஏற்படுத்தித் கிரயம் செய்யாமல் பொறுப்பாளர்கள் தங்களது பெயரிலும, தங்களது மனைவி பெயர்களிலும் கிரயம் செய்து இருக்கிறார்கள்.

ஆகவே இதுவரையிலும் சங்க உறுப்பினர்களுக்கு நிலம் வழங்கப்படவில்லை. இதற்கிடையில் சங்கத்தின் சட்ட விதிமுறைகளுக்கு மாறாக சிலர் தேர்தல் பணிக்குழு என்ற பெயரில் பொதுக்குழு கூட்டம் நடத்த முடிவு செய்து வியாபாரிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டி மிரட்டல் விடுத்து வருகின்றர். இந்த சங்கத்தின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு தலைவர் மட்டுமே அதிகாரம் பெற்றவராவார். எனவே பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு அனுமதிக்க கூடாது என்றும் தற்போது கொரோனா பரவல் நிலையில் உறுப்பினர்களுக்கு நோய்த் தொற்று அபாயம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் வியாபாரிகள் சங்கத்தினர் மனுவில் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |