அணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுவதால் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 4-வது ஆண்டாக 102 அடியை எட்டியதால் உபரிநீர் பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இதனால் கொடிவேரி அணையில் தண்ணீர் வேகமாக செல்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அங்கு குளிக்க தடை விதித்துள்ளது.
இதனை அறியாமல் வெளியூரிலிருந்து வந்த சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் அங்கு இருக்கின்ற மீன் கடைகள் திறக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியபோது, தண்ணீரின் சீற்றம் குறைந்த பின்பு பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.