Categories
உலக செய்திகள்

விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்…. படுகாயமடைந்த பொதுமக்கள்…. தகவல் வெளியிட்ட சவுதி ஊடகம்….!!

விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சவுதி அரசு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள Asir மாகாணத்தின் தலைநகரான Abha நகரில் சர்வதேச விமான நிலையம் ஓன்று அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் பயணிகள் விமானம் சேதமடைந்துள்ளதாகவும் சவுதி அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. அதிலும் கடந்த 24 மணி நேரத்திற்குள் விமான நிலையத்தை குறிவைத்து 2 ட்ரோன் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது.

ஆனால் இந்த தாக்குதலில் எவருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் இந்த மாதிரியான தாக்குதல்களுக்கு பலமுறை  ஹவுத்தி அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |