மீதமுள்ள ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியில் புதிதாக 2 வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர் .
14-வது ஐபிஎல் சீசனில் மீதமுள்ள போட்டிகள் வருகின்ற 19-ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த இங்கிலாந்து வீரர்களான ஜோஸ் பட்லர் ,ஜோப்ரா ஆர்ச்சார் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் மீதமுள்ள தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால் நியூசிலாந்து அணி வீரரான கிளென் பிலீப்ஸ் மாற்று வீரராக ராஜஸ்தான் அணி ஒப்பந்தம் செய்துள்ளது .
இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் மேலும் 2 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரரான எவின் லூயிஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளரான ஒஷேன் தாமஸ் ஆகிய இருவரையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இதுவரை 45 சர்வதேச டி20 போட்டியில் விளையாடியுள்ள எவின் லூயிஸ் 1,318 ரன்கள் குவித்துள்ளார் .இவரது ஸ்டிரைக் ரேட் 158 என்பது குறிப்பிடத்தக்கது.