சூர்யா நடிப்பில் உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, திவ்யா துரைசாமி, இளவரசு, குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.
#EtharkkumThuninthavan #ET
Completed 51 days long schedule today . Sun and rain couldn't stop our speed. what a hard working team . unbelievable effort. Thank u @Suriya_offl sir @sunpictures @RathnaveluDop sir and everybody 🙏❤️🤗— Pandiraj (@pandiraj_dir) August 31, 2021
இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்தின் புதிய அப்டேட்டை இயக்குனர் பாண்டிராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ’51 நாட்கள் நீண்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. வெயிலும், மழையும் எங்கள் வேகத்தை தடுக்கவில்லை. என்ன ஒரு கடின உழைப்பாளி குழு. நம்பமுடியாத முயற்சி. சூர்யா, சன் பிக்சர்ஸ் நிறுவனம், ஒளிப்பதிவாளர் ரத்னவேலு உள்பட அனைவருக்கும் நன்றி’ என பதிவிட்டுள்ளார். தற்போது அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது .