பிரபல தொகுப்பாளினி DD வித்தியாசமாக போட்டோ ஷூட் நடத்திய வீடியோவை வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவியில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து வருபவர் திவ்யதர்ஷினி எனும் டிடி. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்துமே மிகவும் ஸ்வாரசியமாகவும், கலகலப்பாகவும் இருக்கும். சமீபத்தில் கூட இவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கியிருந்தார்.
இதற்கிடையில் DD அவ்வபோது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாச வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது கலக்கலான போட்டோஷூட் ஒன்றை நடத்திய போது எடுத்த புகைப்படங்களை ஒன்றாக இணைத்து வீடியோவாக எடிட் செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
https://www.instagram.com/p/CTPRjumAbmR/