சன் டிவியின் புதிய சீரியல் கதாபாத்திரங்கள் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.
பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஏற்கனவே பல ஹிட் சீரியல்கள் ஓடிக்கொண்டு இருந்தாலும் அடுத்தடுத்த புதிய சீரியல்கள் வந்து கொண்டேதான் இருக்கிறது.
அந்த வகையில் தற்போது சன் டிவியில் கயல் எனும் புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலில் ராஜா ராணி சீரியல் பிரபலம் சஞ்சீவ் மற்றும் யாரடி நீ மோகினி சீரியல் பிரபலம் சைத்ரா ரெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த புதிய சீரியலில் இடம் பெற்றுள்ள கதாபாத்திரங்கள் ஒன்றாக இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.