நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம், ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் :
தனது அன்பான வார்த்தையால் அனைவரையும் கவரக்கூடிய மேஷராசி அன்பர்களே..!! இன்று நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். அஜீரண கோளாறுகள் போன்றவை ஏற்படக்கூடும். ஆகையால் உடல்நிலையில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். மனைவின் கழகத்தால் மற்றவர்களின் பகை ஏற்படக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். அதிகாரிகளிடம் பணிவாக நடத்தல் அவசியமாக இருக்கும். இன்று அனுகூலமான பலன்கள் ஓரளவு கிடைக்கும். பணவரவு மன திருப்தியை கொடுப்பதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகமும், அவரது நட்பும் கிடைக்கப்பெறுவீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாகவே நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும் போது கவனமாக பயன்படுத்துங்கள். தொழில் வியாபாரம் நிறைவான லாபத்தை இன்று கொடுக்கும். இன்று ஓரளவு மனம் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள்.
இல்லத்தில் கலகலப்பும் வந்து சேரும். இன்று மாலை நேரங்களில் வெளியிடங்களுக்குச் சென்று பொழுதைக் கழிக்க கூடிய சூழல் இன்றிருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களை படிப்பது நல்லது. முயற்சியின் பேரிலே இன்று வெற்றி வாய்ப்புகள் வந்து சேரும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுதும், முக்கிய இடங்களுக்கு செல்லும் போதும் பச்சை நிற ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையோ எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக வெற்றியை கொடுக்கும். அதுபோலவே நீங்கள் இன்று காலையில் எழுந்ததும் விநாயகர் வழிபாட்டுடன் இன்றைய நாளைதொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் பச்சை நிறம்
ரிஷபம் :
மற்றவர்களுக்காக ஓடாய் உழைத்து அலுத்து போகும் ரிஷப ராசி அன்பர்களே..!! இன்று பண வரவால் மன மகிழ்ச்சி இருக்கும். முக்கிய பணிகளை இன்று நீங்கள் மேற்கொள்வீர்கள். அதனால் கவலைகள் மறந்து கலிப்படையக்கூடும். அரசாங்க ஆதரவு மற்றும் வங்கி கடன் உதவிகள் தடையின்றி கிடைக்கும். இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உங்களுடைய நிதி நிலைமை சீராகும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பட்ட சிரமங்கள் அனைத்தும் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு குறைந்து காணப்படுவார்கள். எதிர்பார்த்த இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரியின் சொல்படி நடந்து கொண்டால் நல்லது.
வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். இன்றைய நாள் குடும்பத்தில் ஓரளவு மகிழ்ச்சி காணப்படும். கலகலப்பு இருக்கும். மற்றவர்களுக்கு எந்த வாக்குறுதியும் தயவு செய்து தர வேண்டாம். வாகனத்தில் செல்லும் போது கொஞ்சம் கவனமாக செல்லுங்கள். புதிய முயற்சிகளுக்கு நல்ல விதமாக அமையும். இன்று வெளியிடங்களுக்கு செல்லும்போது முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே நீங்கள் சூரிய நமஸ்காரத்தை வழிபட்டு இன்று நாளை தொடங்கினால் மிகவும் சிறப்பாக இருக்கும். மனம் மகிழ்ச்சியாகவும் காணப்படும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்
மிதுனம் :
அயராது உழைத்துக் கொண்டிருக்கும் மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று போக்குவரத்தில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். குழந்தைகளுக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படும். நீங்கள் எவ்வளவுதான் திறமையாக செயல் பட்டாலும் உங்களுடைய திறமைகள் பாராட்டுக்களை பெறாது. இன்று மற்றவருடன் பகை ஏற்படக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பிடிக்கும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள் நண்பர்கள் உங்களுக்கு கைகொடுப்பார்கள். மனதில் இருந்து வந்த சஞ்சல மனநிலையில் மாற்றம் இருக்கும். பண நெருக்கடி ஓரளவு குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாடு பயணம் சாதகமான பலனை கொடுக்கும். வெளியூரிலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். ஏற்றுமதித் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றகரமான நாளாக இன்று இருக்கும்.
இன்று குடும்பத்தில் கலகலப்பான சூழல் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். முடிந்தால் ஆசிரியரின் சொல்படி நடந்து கொள்வது மிகவும் சிறப்பாக இருக்கும். இன்றும் நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியங்களை செய்யும் பொழுது பச்சை நிற ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டால் இன்று அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். நீங்களும் மகிழ்ச்சியாகவே காணப்படுவீர்கள்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்
கடகம் :
துணிவுக்கு பெயர்போன கடக ராசி அன்பர்களே..!! இன்று தொழில் புரிவோருக்கு வீண் செலவுகளும் பணமுடையும் கொஞ்சம் தவிர்க்க முடியாத சூழ் நிலையாக இருக்கும். நேர்வழியில் பணம் செலவு செய்தால் நிம்மதி பிறக்கும். ஆகையால் எந்த ஒரு குறுக்கு வழிக்கும் செல்லாமல் பொறுமையாக காத்திருங்கள். சினத்தை குறைத்தால் சிக்கல்கள் தீரும். இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வியில் அக்கறை காண்பீர்கள். நண்பர்கள் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவார்கள். பணத்தேவை பூர்த்தியாகும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். இன்றைய நாள் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி இருக்கும்.
இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடையக்கூடும். இருந்தாலும் பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பார்ப்பது மிகவும் சிறப்பு. அதுபோலவே இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது, முக்கியமான காரியத்தை செய்யும்போது வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அது போல நீங்கள் இன்று காலையில் எழுந்ததும் விநாயகரை மனதார நினைத்து வழிபட்டு தொடங்கினால் அனைத்தும் சிறப்பாக இருக்கும். நீங்களும் மகிழ்ச்சியாகவே காணப்படுவீர்கள்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்
சிம்மம் :
எதையும் ஆராய்ந்து பார்த்து தீர்க்கமான முடிவை எடுக்கக்கூடிய சிம்மராசி அன்பர்களே..!! இன்று தொலைதூர நல்ல தகவல்களால் புதிய உற்சாகம் பிறக்கும். மனையாளின் ஒத்துழைப்பு மன மகிழ்ச்சியை கொடுக்கும். நண்பர்கள் உதவி கிடைக்கும். புதிய உத்தியோக வாய்ப்புகள் ஏற்படும். இன்று தொழில் வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். உடல்நிலையில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள்.
நண்பர்களின் ஆலோசனைகள் உங்களை நல்வழிப்படுத்தும். இன்று முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் நாளாகவும் இருக்கும். இன்று மாணவர்கள் கல்வி நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். அது போலவே படித்த பாடத்தை எழுதிப் பாருங்கள். அப்போதுதான் நினைவில் வைத்துக் கொள்ள உதவும். இன்று நீங்கள் முக்கியமான பணியை செய்யும் பொழுது அல்லது முக்கியமான காரியங்களை செய்யும்போது சிவப்பு நிற ஆடை அல்லது சிவப்பு நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே இன்று விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்
கன்னி :
தன் கண் பார்வையால் அனைவரையும் கவரக்கூடிய கன்னிராசி அன்பர்களே..!! தோல்வியே வெற்றிக்கான முதல் படி என உணர்ந்தவர்கள் நீங்கள். தோல்வியை கண்டு துவளாதவர்கள். முன்னேற முயற்சிகள் மேற்கொள்பவர்கள். இன்று நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் அனைத்தும் சிறப்பை கொடுக்கும். வெற்றியை கொடுக்கும். தாயின் ஆரோக்கியத்தில் மட்டும் தனி கவனம் வேண்டும். இன்று வீண் அலைச்சல் காரிய தாமதம் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். புதிய முயற்சிகளை மட்டும் தள்ளிப் போடுவது கொஞ்சம் நல்லது. காரியத்தில் அனுகூலமும் இருக்கும். உணர்ச்சிகரமாக பேசி மற்றவர்களை கவர்வீர்கள். எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை ஏற்படும். பண வரவு சிறப்பாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சினைகள் தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டங்களும் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் இன்று இருக்கும். இன்று உங்களைப் பார்த்து மற்றவர்கள் ஆச்சரியப்படக்கூடும், பொறாமையும் படக்கூடும்.
இன்றைய நாள் நீங்கள் செய்யக்கூடிய விஷயங்கள் அனைத்தும் வெற்றிகரமான விஷயங்களாகவே இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் இருக்கும். அதுபோலவே மனதில் ஏதேனும் ஒரு சிந்தனை ஓடிக்கொண்டே இருக்கும். முடிந்தால் ஓய்வு நேரத்தில் கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்தை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிற ஆடை அல்லது பச்சை நிறை கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள்.. அனைத்து காரியமும் சிறப்பாக இருக்கும். அது போலவே இன்று காலையில் எழுந்ததும் விநாயகர் வழிபாட்டை தொடங்கினால் அனைத்தும் சிறப்பாக இருக்கும். நீங்கள் நினைத்தது நடக்க கூடிய விதமாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 3
அதிஷ்ட நிறம் : பச்சை மற்றும் வெள்ளை நிறம்
துலாம் :
முடியாததை முடித்துக் காட்டும் துலாம் ராசி அன்பர்களே..!! இன்று தன வரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நினைத்த காரியங்கள் நினைத்தது போல் நடக்கும். உங்களுடைய புத்திசாலித்தனத்தால் பொருளாதார நிலை மேம்படும். இன்று குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும் கணவன் மனைவிக்கிடையே இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் மூலம் இருந்த மன வருத்தம் நீங்கி அவர்களுடன் சந்தோஷமாக வெளியே சென்று வருவீர்கள். எல்லா காரியங்களும் அனுகூலமாகவே நடக்கும்.
மனக்கவலை நீங்கி நிம்மதியும் உண்டாகும். மேலதிகாரிகள் சக ஊழியர்கள் உங்களிடம் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். இன்றைய நாள் நீங்கள் மனமகிழ்ச்சி கொள்ளும் நாளாக இருக்கும். அதுபோலவே மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். சிறப்பாக இருக்கும். அதுபோலவே காலையில் விநாயகரை வழிபட்டு தொடங்கினால் அனைத்துவித நன்மைகளும் நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் காவி நிறம்
விருச்சிகம் :
எதிரிகளை தவிடுபொடியாக்கும் விருச்சிக ராசி அன்பர்களே..!! இன்று தன லாபம் அதிகரிக்கும்.. தொழில் சம்பந்தமாக பெரியோர்களின் சந்திப்பு இனிதாக அமையும். எண்ணியபடி எண்ணிய காரியங்கள் ஏற்றத்தைக் கொடுக்கும். பெண்களால் நன்மை உண்டாகும். இன்று வழக்கத்தை விட கூடுதலாகவே உழைக்க வேண்டி இருக்கும். இன்று பொருள் வரவு சிறப்பாக இருக்கும். பயணம் செல்ல நேரிடும். வெற்றி பெற தடைகள் தாண்டி உழைக்க வேண்டியிருக்கும். பெரியோரின் ஆலோசனைப்படி செயல்படுவது நல்லது. வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்கப்பெறுவீர்கள். வாகனங்களில் செல்லும்போது ஆயுதங்களை கையாளும் போது கொஞ்சம் கவனமாக கையாளுங்கள்.
இன்று பொறுமையைக் கடைப்பிடித்தால் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறக்கூடும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கொஞ்சம் கூடுதலாகத்தான் உழைக்க வேண்டி இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது அதிகமான இடங்களுக்கு செல்லும் பொழுது வெள்ளை நிறத்தில் கைக்குட்டை அல்லது வெள்ளை ஆடை அணிந்து செல்லுங்கள் அனைத்து விஷயங்களும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் விநாயகரை மனதார வழிபட்டு இன்று நாளை தொடங்கினால் அனைத்தும் சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்
தனுசு :
அனைவரையும் வசீகரிக்க கூடிய தனுசு ராசி அன்பர்களே..!! இன்று புதிய உத்தியோக வாய்ப்புகள் பதவி உயர்வு ஆகியவற்றை எதிர்பார்க்கக் கூடும். கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் இனிய மாற்றங்களை இன்று நீங்கள் சந்திக்க கூடும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். வீண் கவலை கொஞ்சம் ஏற்படும். வாக்குவாதங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவருடன் சில்லறை சண்டைகள் கொஞ்சம் ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். வாகனங்கள் செல்லும்போது கவனமாக செல்லுங்கள். பூர்வீக சொத்துக்களில் வரும் வருமானம் கொஞ்சம் குறைய கூடும்.
ஆகையால் அதற்கு ஏற்றார் போல் நீங்கள் செயல்படுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவதற்கு கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். ஆசிரியர் சொல்படி பணி நடந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கிய இடங்களுக்கு செல்லும் போது மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டை எடுத்து செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே காலையில் விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டால் இன்று அனைத்து காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்
மகரம் :
மற்றவர்கள் மீது அதிக அன்பு கொண்ட மகர ராசி அன்பர்களே..!! இன்று இரவும் பகலும் போல் இன்பமும் துன்பமும் மாறி மாறி இருக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். தெய்வ நம்பிக்கையால் தேகத்தில் புதிய தெம்பு ஏற்படும். இன்று தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும் பண வரவு திருப்திகரமாக இருக்கும். கடன்களை அடைப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு மேலதிகாரிகள் திருப்தி அடையக்கூடும். பெண்களுக்கு காரிய தடைகள் நீங்கி எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
இன்று மன மகிழ்ச்சியும் பெறுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும்போது அல்லது வெளியிடங்களுக்கு செல்லும் போது நீல நிறத்தில் ஆடை அல்லது நீல நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும் அதுபோலவே காலையில் விநாயகர் வழிபாட்டுடன் இன்று நாளை தொடங்கினால் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்
கும்பம் :
குடும்பத்திற்காக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் கும்பராசி அன்பர்களே..!! இன்று உங்களுக்கு தன வரவு கூடும். எதிரிகள் பணிவர். எதிர்ப்புகள் குறையும். நண்பர்கள் உதவி நன்மை கொடுக்கும். பெயரும் புகழும் உயரும். புத்துணர்ச்சி கொடுக்கும். இன்று குடும்பத்தில் இருந்த இறுக்கமான நிலை மாறும் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். அதில் மட்டும் கவனமாக இருங்கள். பிள்ளைகள் விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது நண்பர்களிடம், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மையை கொடுக்கும். காரியங்களில் இருந்த தடை தாமதம் விலகி செல்லும். முயற்சிகளில் உடனடியாக பலன் கிடைக்காது.
கொஞ்சம் கடுமையாகத்தான் இன்று உழைக்க வேண்டியிருக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் ஓரளவு சிறப்பு கொடுக்கும். குடும்பம் இன்று ஓரளவு கலகலப்பாக காணப்படும். மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனத்தை செலுத்தி படிப்பது நல்லது. கூடுமானவரை கொஞ்சம் பொறுமையாக செயல்படுங்கள். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான இடத்திற்கு செல்லும் பொழுது நீல நிறத்தில் ஆடை அல்லது நீல நிறத்தில் கைக்குட்டை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக நடக்கும். வெற்றிகளை குவிக்க முடியும். அது போலவே நீங்கள் முடிந்தால் விநாயகர் வழிபாட்டுடன் இன்று நாளை தொடங்கினால் அனைத்தும் சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிகமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்
மீனம் :
அன்புக்காக ஏங்கி தவித்து கொண்டிருக்கும் மீனராசி அன்பர்களே..!! இன்று சுக சௌக்கியதிற்கு பங்கம் விளையும். நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் பணவரவு தாமதப்பட்டு தான் வரும். எதையும் சாதிக்கும் திறமை மட்டும் பெறுவீர்கள். செலவு அதிகரிக்கும். அனைத்து பிரச்சனைகளையும் சமாளித்து முன்னேறி செல்வீர்கள். இன்று எந்த ஒரு காரியத்திலும் சாதகமான பலன் பெறுவதற்கு கொஞ்சம் கடுமையாகத்தான் உழைக்க வேண்டி இருக்கும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது கொஞ்சம் கவனமாக இருங்கள். அதாவது பழைய பிரச்சினைகள் உங்களுக்கு சரியாகும். பேசி எடுக்கும் முடிவில் நன்மையே கொடுப்பதாக இருக்கும். அடுத்தவருக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது எப்போதும் நல்லது.
எந்த ஒரு வேலைக்கும் கூடுதலாக அலைய வேண்டியிருக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை இருக்கும். குடும்பத்தில் ஓரளவு கலகலப்பு காணப்படும். வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது பொருட்கள் மீது கவனம் இருக்கட்டும். இன்றைய நாள் ஓரளவு வெற்றி பெறும் நாளாக இருக்கும். மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்து விஷயங்களும் சிறப்பாக நடக்கும். காரியத்தில் வெற்றி ஏற்படும். அதுபோலவே நீங்கள் விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்