Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எதுக்குனே தெரியல…? சினிமா தயாரிப்பாளரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

சினிமா தயாரிப்பாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள டவுன் ரயில் நிலையம் அருகில் தனியார் தங்கும் விடுதி வசதி இருக்கின்றது. அந்த விடுதியில் கடந்த 27-ஆம் தேதி புங்கவாடி பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன் என்பவர் அறை எடுத்து தங்கியிருந்தார். இந்நிலையில் ஜெயசீலன் இரவு வழக்கம்போல் அறையின் கதவை பூட்டிக்கொண்டு உறங்கியுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் ஜெயசீலன் அறை கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த லாட்ஜ் ஊழியர்கள் ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். அப்போது ஜெயசீலன் மர்மமான முறையில் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து லாட்ஜ் ஊழியர்கள் கொடுத்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெயசீலன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன்பின் ஜெயசீலன் தங்கியிருந்த அறையை காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். மேலும் அவரது செல்போனில் இருந்து வந்த அழைப்புகளை காவல்துறையினரின் ஆய்வு செய்தபோது ஜெயசீலன் திருப்பூரை சேர்ந்த சவுந்தரராஜன் என்பவரிடம் அடிக்கடி பேசியது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து சவுந்தரராஜன் எண்ணில் காவல்துறையினர் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது காவல்துறையினரிடம் பேசிய சுந்தரராஜன் தன்னிடம் ஜெயசீலன் 20 லட்சம் ரூபாய் கடன் வாங்கி திருப்பி தராமல் தாமதப்படுத்தி வந்தார் என கூறியுள்ளார். மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஜெயசீலன் சினிமா தயாரிப்பாளர் என்பதும், படம் தயாரிப்பதற்காக அவர் சுந்தரராஜனிடம் கடன் வாங்கியதும் தெரியவந்தது. இவ்வாறு ஜெயசீலன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |