Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“முறையாக கொடுக்கல” போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. சேலத்தில் பரபரப்பு….!!

வேலை வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள நைனார்பாளையம் பகுதியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிகள் வழங்குவதில் முறைகேடு நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் புகார் கொடுத்து வந்தனர். அதிலும் குறிப்பாக இந்த திட்டத்தில் தங்களது பகுதியில் இருப்பவருக்கு முறையாக வேலை கொடுக்கவில்லை என்று கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் திடீரென பைத்தூர்- ஆத்தூர் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் ஒன்றிய அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். மேலும் இதுதொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற செயலாளரிடம் பேசி முறையாக வேலை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை மற்றும் அதிகாரிகள் உறுதியளித்த பின் பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இவ்வாறு நடைபெற்ற போராட்டத்தினால் சுமார் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Categories

Tech |