Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காரில் சென்ற போலீஸ்காரர்….. மயக்க ஊசி செலுத்திய கும்பல்…. சென்னையில் பரபரப்பு…!!

உளவுப்பிரிவு போலீசை கடத்தி சென்று 1 லட்ச ரூபாயை 3 பேர் கொண்ட கும்பல் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள சூளைமேடு பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் உளவு பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் வேலைக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்ட ரவியை அதே பகுதியில் வசிக்கும் அஜய் விக்கி என்பவர் காரில் ஏற்றி சென்றுள்ளார். இதனை அடுத்து கார் சிறிது தூரம் சென்றவுடன் அஜய் விக்கியும், காரில் இருந்த மற்ற இரண்டு பேரும் இணைந்து ரவிக்கு மயக்க ஊசி செலுத்தியுள்ளனர்.

இதனை தொடர்ந்து காரிலேயே சுமார் 18 மணி நேரம் சுற்றி விட்டு ரவியின் கூகுள்பே மூலம் அவரது வங்கி கணக்கில் இருந்து 1 லட்ச ரூபாயை மோசடி செய்துள்ளனர். அதன் பிறகு ரவியை கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடு பகுதியில் இறக்கி விட்டு அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 3 பேர் கொண்ட கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |