தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக துபாய் சென்றுள்ளார். இந்நிலையில் மதுரையில் தேமுதிக கழக நிர்வாகிகள் திருமண விழாவில், விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளை வாழ்த்தினர். அப்போதுபேசிய அவர், விஜயகாந்த் உடல்நிலை பரிசோதனைக்காக மட்டுமே துபாய் சென்றுள்ளார். தற்போது அவர் நல்ல உடல்நலத்துடன் தான் இருக்கிறார்.
பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான முடிவை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வந்தவுடன் அறிவிப்பார். அரசியல் வெற்றி, தோல்வி என்பது அனைத்து கட்சிகளுக்கும் சகஜம். தமிழக கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கிறோம் என்று கூறியுள்ளார்.