Categories
தேசிய செய்திகள்

“கேரளாவில் எகிறும் பாதிப்பு” தமிழ்நாடு, கர்நாடகாவுக்கு அலெர்ட்…!!!

நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் கேரளாவில் மட்டும் தொற்று தீவிரம் அதிகரித்து வருகிறது. ஓணம் பண்டிகைக்கு பின்னர் தொற்று இன்னும் தீவிரமடைந்துள்ளது. கொரோனா முதல் அலையை சிறப்பாகக் கையாண்ட கேரள அரசு, இரண்டாவது அலையை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. இதனால் இரவு ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கை அம்மாநில அரசு அமல்படுத்தி உள்ளது.

மேலும் கடும் கட்டுப்பாடுகளும் அங்கு விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் பாதிப்பு உயர்ந்து வருவதால் அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகாவில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் கேரள எல்லையில் அமைந்துள்ள பகுதியில் தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கி விடவும் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |