Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

1இல்ல 2இல்ல 16 1/2 கோடி…. பயனாளிகளுக்கு நலத்திட்டம்…. அதிகாரிகளின் செயல்….!!

691 பயனாளிகளுக்கு 16 கோடி மதிப்புடைய வீட்டுமனை பட்டா மற்றும் குடியிருப்புகளை கலெக்டர், எம்.எல்.ஏ, எம்.பி ஆகியோர் வழங்கியுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சித் துறை, வருவாய், ஊரக வளர்ச்சி மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பாக 691 பயனாளிகளுக்கு 16 கோடியே 58 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய வீட்டு மனை பட்டா மற்றும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட வீடுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் குஷ்வாஹா தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு வரவேற்று பேசியுள்ளார்.

இதில் நாடாளுமன்ற உறுப்பினரான டி.எம் கார்த்திக் ஆனந்த் மற்றும் சி.என் அண்ணாதுரை ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளனர். இதனை அடுத்து டி.எம் கதிர் ஆனந்த், எம்.பி கூறும் போது 3 மாதத்திற்கு ஒருமுறை நடத்தி புதிய பயனாளிகளை கண்டுபிடித்து இலவச வீட்டு மனை பட்டா மற்றும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட வீடுகள் வழங்க வேண்டும் மற்றும் மாணவர்களுக்கு கல்வி கடன்கள் உரிய நேரத்தில் தடையில்லாமல் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இதில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் மல்லகுண்டா பகுதியில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் தற்போது அவை நிலுவையில் இருக்கிறது. இது குறித்த விவரங்களை கொடுத்தால் தொழில்துறை அமைச்சரை சந்தித்து சட்டசபை கூட்டத்தில் திட்டத்தை செயல்படுத்த கூறுவேன் என டி.எம்.கே ஆனந்த் கூறியுள்ளார். மேலும் இம்மாவட்டத்தில் தொழில் பூங்கா அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |