Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நண்பரிடையே ஏற்பட்ட தகராறு…. வாலிபருக்கு ஏற்பட்ட நிலை…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

நண்பரை கத்தியால் வெட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காமராஜ் நகர் பகுதியில் மகாராஜன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மகாராஜன் தனது நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் அவரது நண்பரான மாணிக்கத்திற்கும் இடையே செல்போன் பார்த்தது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மாணிக்கம் மகாராஜனை அவதூறாக பேசியுள்ளார்.

அதன்பின் மாணிக்கம் திடீரென கத்தியால் மகாராஜனின் கைகளில் வெட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து மகாராஜன் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாணிக்கத்தை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |