கணவன் தன்னிடம் கேட்காமல் பானிபூரி வாங்கி வந்த காரணத்திற்காக மனைவி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனே என்ற பகுதியை சேர்ந்த பிரதிக்ஷா அதே பகுதியை சேர்ந்த காகினிநாத் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த நாளிலிருந்து இருவரும் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை பிரதிக்ஷா வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். ஆனால் அலுவலத்தில் இருந்து வரும்பொழுது கணவன் பானிபூரி வாங்கி வந்துள்ளார்.
தான் வீட்டில் சமையல் செய்து கொண்டிருக்கும் நிலையில் எப்படி வெளியிலிருந்து பானிபூரி வாங்கி வரலாம் என்று கூறி அவருடன் சண்டை போட்டுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் விரக்தியில் விஷம் அருந்தியுள்ளார். உயிருக்கு போராடிய பிரதிக்ஷா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பானிபூரி தகராறில் மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.