Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

குடிபோதையில் இருந்த ராணுவ வீரர்…. எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சந்தை கோட்டையூர் நேதாஜி தெருவில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் பஞ்சாப் மாநிலம் பகுதியில் இராணுவ வீரராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பிரவீன் குமார் கடந்த மாதம் 13-ஆம் தேதி விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

அதன்பின் குடிபோதையில் இருந்த அவர் வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை முத்துசாமி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரவீன்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |