Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அஜித்தின் ‘வலிமை’… வெளியான சூப்பர் அப்டேட்…!!!

அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை  படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் கார்த்திகேயா, யோகி பாபு, குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் . சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடலான ‘நாங்க வேற மாரி’ பாடல் வெளியாகி பட்டி தொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது.

Ajith's 'Valimai' motion-poster rakes in millions of views | The News Minute

மேலும் இறுதிகட்ட படப்பிடிப்பிற்காக வலிமை படக்குழு ரஷ்யா சென்றிருந்தது. இதில் மிகப்பெரிய பைக் சண்டைக்காட்சி ஒன்று படமாக்கப்பட இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் இந்த படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த படத்தின் அடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

 

Categories

Tech |