Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

போலி ஆவணம் தயாரிப்பு…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்த குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுக்கொட்டாய் பகுதியில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் விவசாயியான இவர் தன்னுடைய தாத்தா பெரிய கவுண்டர் மற்றும் பாட்டி அத்தாயி ஆகியோருக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து உரிமை கொண்டாடி வந்துள்ளார். அதன்பின் கடந்த 2010-ஆம் ஆண்டு மோகன் அத்தை சுந்தரம்மாள் தந்தை பெரிய கவுண்டர், தாய் அத்தாயி ஆகியோரிடம் வங்கிக்கடன் பெறுவதற்காக கூறி பத்திரத்தில் கையெழுத்து போடச் சொல்லி நிலத்தை தன் பெயரில் தானமாக எழுதி வாங்கியுள்ளார்.

இதனை அறிந்த மோகன் தான் அனுபவித்து வருகின்ற நிலத்தை வயது முதிர்ந்த தாத்தா மற்றும் பாட்டியை ஏமாற்றி தான செட்டில்மென்ட் வாங்கிக் கொண்டதாக கூறி சுந்தரம்மாள் மீது கோர்ட்டில் வழக்கு பதிவு செய்துள்ளார். இதனையடுத்து தான செட்டில்மென்ட் அசல் பத்திரத்தையும் கோட்டில் ஒப்படைத்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் இருந்த போது தான செட்டில்மெண்ட் பத்திரம் தொலைந்து விட்டதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்து அதற்கான சான்றுகள் பெற்று 4 1/2 ஏக்கர் நிலத்தை பழங்காநத்தம் பகுதியில் வசிக்கும் வேலுசாமி என்பவருக்கு சுந்தராம்பாள் கிரையம் செய்து கொடுத்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து கொண்ட மோகன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் சுந்தராம்பாள், அவரது கணவர் கந்தசாமி, இரண்டு மகன்கள், நிலத்தை வாங்கிய வேலுசாமி, சாட்சி கையெழுத்து போட்ட சரவணன் மற்றும் சுரேஷ் ஆகிய 7 பேர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் சசிகுமார், சுந்தராம்பாள் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |