தமிழக அரசு துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு புதிய வீடு கட்டுவதற்காக உதவி செய்யும் விதமாக அரசு சில நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அறிவித்துள்ளது. அரசு பணியாளர்கள் புது வீடு கட்டுவதற்கும் ஏற்கனவே கட்டிய வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பை சொந்தமாக வாங்கவும் முன் பணமாக தமிழக அரசு கொடுக்கும் என்று அறிவித்துள்ளது. இதுகுறித்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், அரசு பணியாளர்களுக்கு சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது வாழ்நாள் கனவாக இருக்கிறது.
அந்த கனவை நனவாக்கும் விதத்தில் பல நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு கொண்டுவர முடிவு செய்துள்ளது. அதன்படி, கட்டிய வீடுகளை வாங்க விரும்பும் அரசு பணியாளர்களுக்கு வீடு கட்டும் முன் பணத்தினை அரசு வழங்க உள்ளது. இந்த முன் பணமானது அனைத்து மத்திய மற்றும் தமிழக ஊழியர்களுக்கும் அவர்களுடைய ஊதிய அளவில் முறையே ரூ.60 லட்சம் மற்றும் ரூ.40 லட்சம் வரை கொடுக்கப்பட உள்ளது. அதே போன்று வீடு கட்டுவதற்காக ஏற்கனவே வங்கியில் கடன் பெற்றவர்கள் அதை அரசு முன் பணமாக மாற்றிக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.