ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக அனைத்து மாற்றுத்திறனாளிகளும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பாக காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் சாந்தி தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் துணை தலைவர்களான கார்த்தி மற்றும் துணைச்செயலாளர் அஞ்சலி ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். பின்னர் ஆறுமுகம் மற்றும் மாவட்ட முன்னாள் தலைவர் சுப்பிரமணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசியுள்ளனர்.
இதனையடுத்து மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய ஊரக வேலை வாய்ப்புக்கான அடையாள அட்டை உடனடியாக வழங்க வேண்டும் எனவும், பின் தொடர்ச்சியாக 1௦௦ நாட்களுக்கு வேலை வழங்குமாறு அவர்கள் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து அரசு ஆணையின் படி ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்பதனை உறுதிப்படுத்த வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் மாற்றுதிறனாளிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்தப் போராட்டத்தில் இம்மாவட்டத்தில் இருக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டுள்ளனர்.