Categories
மாநில செய்திகள்

9 மாவட்டங்களில் சுமார் 6000 குடியிருப்புகள்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழக சட்டப்பேரவையில் இன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கான பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் சு.முத்துசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில் தமிழ்நாட்டில் நெல்லை, மதுரை, தஞ்சை, சிவகாசி, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல் ஆகிய 9 மாவட்டங்களில் ரூபாய் 950 கோடியில் சுமார் 6 ஆயிரம் குடியிருப்புகள் கட்டப்படும் என்று குடிசை மாற்று வாரிய கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வண்டலூர் புதிய பேருந்து நிலையம் அடுத்த ஆண்டு மார்ச் முதல் செயல்பாட்டுக்கு வரும் என்றும், திருமழிசை அருகே குத்தம்பாக்கத்தில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் 2022 அக்டோபர் முதல் செயல்படும் என அறிவித்துள்ளது.

Categories

Tech |