திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் செப்டம்பர் மாதம் நடைபெறும் விழாக்கள் குறித்து தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் விழாக்கள் குறித்த விவரங்களை தேவஸ்தானம் அறிவித்து வருகிறது. அதன்படி இந்த செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் முக்கிய விழாக்கள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை நாத நீராஜனம் மேடையில் பாலகாண்டா முதல் அகண்ட பாராயணமும், 3-ந் தேதி முதல் 18-ந் தேதிவரை வசந்த மண்டபத்தில் ஷோடா சதினா பாலகாண்ட பாராயண தீட்சையும், 8-ந் தேதி பலராம ஜெயந்தி, 9-ந் தேதி வராஹ ஜெயந்தி, 10-ந் தேதி விநாயகர் சதுர்த்தி மற்றும் 19-ந் தேதி அனந்த பத்மநாப விரதம் ஆகியவை நடக்கிறது.