ஆடு மேய்க்க சென்ற சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியதுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொந்துக்குட்டை கிராமத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரித்திகாஸ்ரீ மற்றும் அனிஷாஸ்ரீ என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இவர்கள் 2 பேரும் ஆடு மேய்ப்பதற்காக ஏரிக்கு சென்றுள்ளனர். அப்போது சகோதரிகள் 2 பேரும் ஏரி தண்ணீரில் குளிக்க இறங்கிய போது எதிர்பாராவிதமாக ரித்திகாஸ்ரீ தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அனுஷாஸ்ரீ சத்தம் போட்டு கூச்சலிட்டுள்ளார். பின்னர் அவரது சத்தம் கேட்டு ஓடிவந்த அருகில் இருந்தவர்கள் சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் ரித்திகாஸ்ரீ ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் உறவினர்கள் வந்து அவரின் உடலை வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். பின்னர் ஏரியில் மூழ்கி சிறுமி இறந்ததை குறித்து கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.