Categories
Uncategorized

திருநங்கையை கொலை செய்த இளைஞர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…. நீதிமன்றத்தில் ஆஜர்….!!

பெண் என்று நினைத்து பழகிய திருநங்கையை கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனை சேர்ந்தவர் 27 வயதான போக்டா நோ. இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு சமூக ஊடகத்தின் மூலம் நிக்கி என்பவருடன் பழகி நட்பு பாராட்டி உள்ளார். இதன் பின்பு ஜூன் 6 ஆம் தேதியன்று போக்டா நோவுடன் நிக்கி டேட்டிங் செல்ல விரும்புவதாக கூறியுள்ளார். இதனையடுத்து இருவரும் ஒரு இடத்தில் சந்தித்துக் கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து காரில் இருவரும் உறவில் ஈடுபட்டபோது நிக்கி ஒரு பெண் அல்ல திருநங்கை என்று தெரிய வந்துள்ளது. இதனால் போக்டா நோ அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் ஒரு திருநங்கையுடன்  தொடர்பில் இருப்பது தனது குடும்பத்திற்கு தெரிந்தால் தன்னை அவமதிப்பார்கள் என்று நிக்கியிடம் போக்டா நோ கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த தகராறில் நிக்கி துப்பாக்கியை எடுத்து போக்டா நோவை  சுட முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் போக்டா நோ செல்போன் சார்ஜரை எடுத்து நிக்கியின் கழுத்தை நெரித்துள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே நிக்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தை அறிந்த போலீசார் போக்டா நோவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதிலும் நீக்கியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று அவரின் தாயார் திருநங்கைகளுடன் இணைந்து தொடர்ந்து போராடினார். இந்த நிலையில் போக்டா நோ மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் தண்டனையை வரும் 9 ஆம் தேதி ஒத்தி வைத்துள்ளனர்.

Categories

Tech |