கூலித் தொழிலாளி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள இண்டுர் அருகாமையில் இருக்கும் சோமனஅள்ளி பகுதியில் கமலேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் இருக்கும் ஏரியில் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தகவலின் படி விரைந்து சென்ற காவல்துறையினர் கமலேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.