கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு, அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்வை நிறுத்தி வைத்திருந்தது. இதனால் எப்போது கிடைக்கும் என்று காத்திருந்த ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி 28 சதவீத அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு பின்னனர் ஒவ்வொரு மாநிலமாக தங்களுடைய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக தற்போது நடைமுறையில் உள்ள 28 சதவீத அகவிலைப்படியானது விரைவில் 31 சதவீதமாக உயர்த்தப்படும் என்று மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த செப்டம்பர் மாதத்தில் இந்த அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. 31 சதவீதமாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டால் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 5,580 ஆக உயரும்.