Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ வாடிக்கையாளர்களே! செப்டம்பர்-30 கடைசி தேதி…. மறந்துவிடாதீர்கள்…!!!

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்கள் அனைவரும் செப்டம்பர்-30ஆம் தேதிக்குள் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க வேண்டுமென்று கூறியுள்ளது. அவ்வாறு இணையாவிட்டால் அந்த பான்கார்டு செல்லாது எனவும்,  பான் கார்டு வைத்து வாங்கிய எஸ்பிஐ கார்டு போன்றவற்றிலும் பிரச்சனை ஏற்படும்.

எனவே ஆதார் கார்டு பான் கார்டுடன் இணைக்க வேண்டியது கட்டாயம் என்று அறிவுறுத்தியுள்ளது. ஆதாருடன் பான் கார்டு இணைக்க வேண்டும் என்றால் முதலில் வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு சென்று லின்க் ஆதார் என்ற ஆப்சனை தேர்வு செய்து இணைத்து விடலாம். அப்படியில்லையென்றால் எஸ்எம்எஸ் மூலமாகவும் இணைத்துக் கொள்ளலாம்.

உங்களுடைய செல்போன் என்னிலிருந்து” UIDPAN” SAPCE  “12 digit Aadhaar” SPACE “10 digit PAN” என டைப் செய்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.  உதாரணமாக, உங்களுடைய ஆதார் எண் 111122223333 ஆகவும், பான் நம்பர் AAAPA9999Q ஆகவும் இருந்தால் நீங்கள் UIDPAN 111122223333 AAAPA9999Q என டைப் செய்து அனுப்ப வேண்டும். இவ்வாறு அனுப்பியவுடன் உங்களது பான் கார்டு ஆதாருடன் இணைக்கப்பட்டுவிடும்.

Categories

Tech |