ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த வெள்ளோடு பகுதியில் வசித்து வருபவர் ஞானசேகரன்(26). இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சென்னிமலை பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமி ஒருவரை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் 15 வயதான சிறுமியை ஞானசேகரன் திருமணம் செய்துள்ளதாக அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ராஜேந்திரன் அந்த பகுதிக்கு விரைந்து சென்று சிறுமியை மீட்டுள்ளார். மேலும் இதுகுறித்து வெள்ளோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஞானசேகரனை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.