Categories
உலக செய்திகள்

‘எங்களுக்கு உதவுங்கள்’…. நிறைவேற்றுமா பிரான்ஸ் ராணுவம்….? மொழிப்பெயர்ப்பாளர்களின் கோரிக்கை….!!

ஆப்கானிஸ்தானில் உள்ள மொழிப்பெயர்ப்பாளர்கள் தங்களுக்கு பிரான்ஸ் ராணுவம் உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றுள்ளது. இதனால் அமெரிக்கா, பிரான்ஸ், இந்தியா, ஜெர்மனி போன்ற நாடுகள் தங்கள் நாட்டு மக்களை ஆப்கானில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றி வந்தனர். இதனையடுத்து தலீபான்கள் மீட்பு பணிக்கான கெடுவை கடந்த 31 ஆம் தேதி வரை விதித்திருந்தனர். இந்த நிலையில் நேற்றுடன் அனைத்து மீட்பு பணிகளும் முடிவடைந்துள்ளன. இன்னும் அந்நாட்டை விட்டு வெளியேற விரும்பும் ஆப்கானியர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

மேலும்  20 ஆண்டுக்காலமாக தலீபான்களுக்கு எதிரான போரில் அமெரிக்கா, பிரான்ஸ்  போன்ற நாடுகளுக்கு உதவிய ஆப்கானியர்களும் அங்கேயே உள்ளனர். இந்த நிலையில் பிரான்ஸ் ராணுவத்திற்கு மொழிபெயர்ப்பாளராக பணியாற்றிய ஆப்கானியர்கள் தங்களுக்கு பிரான்ஸ் ராணுவம்  உதவ வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். மேலும் அவர்கள் கூறியதில் “பிரான்ஸ் நாட்டுக்கு நாங்கள் உதவினோம் அவர்கள் எங்களுக்கு உதவலாமே” என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |