வாழ்க்கையில் வெற்றி பேர் நினைப்போருக்கு கண்ணதாசன் கூறிய அர்த்தமுள்ள வரிகள் இன்றளவும் அனைவராலும் பாராட்டப்படுகின்றனர்.
ஒரு நாள் கண்ணதாசன் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் ஒரு கவிதை சொல்கிறார். அந்த கவிதையில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன. கைதட்டல்கள் விசில்கள் ஆரவாரமாக இருந்தன கவிதை முழுவதும் சொல்லி முடித்ததும் கைதட்டல்கள் நிற்பதற்கே ஐந்து நிமிடத்திற்கும் மேலாக இருந்தது. கடைசியாக ஒரு உண்மையைச் சொல்கிறார். நான் இவ்வளவு நேரம் சொன்னது என்னுடைய கவிதை அல்ல. உங்களது கல்லூரி மாணவர் ஒருவர் எழுதிய கவிதை நான் எழுதிய கவிதை அவரே வாசிக்கும் நேரத்தில் ஒரு கைதட்டலும் இல்லை.
ஒரு பாராட்டும் இல்லை எனவே சொல்வது யார் என்று தான் எல்லோரும் பார்க்கிறார்களே தவிர அதில் இருக்கும் அர்த்தத்தை யாரும் பார்ப்பதில்லை என்று கூறுகிறார் கண்ணதாசன். அந்தக் கூட்டத்திலிருந்த அனைவருக்குமே வெட்கித் தலை குனிந்தனர். வாழ்க்கையில் பெரிதாக வெற்றி பெற்ற எல்லோருமே கைதட்டல் பாராட்டுக்கள் உடன் ரசிக்கிறோம். ஆனால் வெற்றி பெற்றவர்களுக்கு இந்த பாராட்டு எதுமே தேவைப்படாது எப்படியாவது வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஆதரவாக சின்னதாக ஒரு வார்த்தை கூறினால் அவர்களுக்குள் மலையளவு பெரிய நம்பிக்கை ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.