பஞ்சாப் மாநிலத்திலிருந்து ஈரோட்டுக்கு ரயிலின் மூலம் 2,600 டன் கோதுமை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலை கடைகளில் இருந்து பொதுமக்களுக்கு அரிசி, கோதுமை போன்ற பல பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களிலிருந்து அரிசி, நெல், கோதுமை போன்ற தானியங்களை நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் பட்டின்டாவிலிருந்து 2,600 டன் கோதுமை 42 பெட்டிகள் கொண்ட ரயில் மூலம் ஈரோடு மாவட்டத்திற்கு வந்துள்ளது. இதனை தொழிலாளர்கள் லாரியில் ஏற்றிக்கொண்டு ஈரோட்டில் இருக்கின்ற வாணிப கிடங்குகளுக்கு எடுத்து சென்றனர்.