13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக 2 கட்டிட தொழிலாளர்களை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் கட்டிட தொழிலாளியான நாராயணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது உறவினர் ஒருவர் குடிநீர் கேன் விநியோகம் செய்யும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நாராயணசாமி தனது உறவினரின் குடிநீர் கேன் விற்பனை செய்யும் கடைக்கு சென்றுள்ளார். அதன் பிறகு கடைக்கு வந்த 13 வயது சிறுமியை நாராயணசாமி கட்டாயப்படுத்தி வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கட்டிட தொழிலாளியான தர்மா என்பவரும் அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் தாயார் ஓசூர் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நாராயணசாமி மற்றும் தர்மா ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.