Categories
உலக செய்திகள்

பெண்களை கொலை செய்த நபர்…. DNA பரிசோதனையில் கண்டுபிடிப்பு…. சிறையிலிருந்து விடுதலை….!!

பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கடந்த புதன்கிழமையன்று சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

இங்கிலாந்தில் உள்ள Leicestershire மாநிலத்தில் இருக்கும் Narborough பகுதியில் கடந்த 1983 ஆம் ஆண்டு நவம்பரில் 15 வயதான  Lynda Mann என்னும் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இந்த சம்பவத்தை குறித்து விசாரணை மேற்கொண்டு இருக்கும் பொழுதே 1986ஆம் ஆண்டு அதே போன்று 15 வயது பெண்ணான Dawn Ashworth என்ற பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த இரண்டு கொலையையும் செய்த குற்றவாளியை போலீசார் தேடி வந்தனர். மேலும் DNA பரிசோதனை மூலம் 5000 ஆண்களை பரிசோதித்துள்ளனர். இதன் மூலம் கொலின் பிட்ச்போர்க் என்பவர் சிக்கியுள்ளார். இந்த இரண்டு கொலைகளையும் நான் தான் செய்தேன் என்று கொலின் பிட்ச்போர்க்கே குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து 1988 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆயுள் தண்டனை பெற்றார்.

தற்பொழுது அவருக்கு 60 வயது ஆகின்ற நிலையில் கொலின் பிட்ச்போர்க்கின் தண்டனை காலம் முடிவடைந்து கடந்த புதன்கிழமை அன்று விடுதலை செய்யப்பட்டார். அவர் விடுதலை செய்யப்பட்டிருந்தாலும் கொலின் பிட்ச்போர்க்கின் வாழ்க்கை முழுவதும் போலீஸ் கண்காணிப்பில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் ஆண்டின் தொடக்கத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு சிறையிலிருந்து வெளியேவருவதற்கான அனைத்து விதிமுறைகளையும் பூர்த்தி செய்ததாக பரோல் வாரியம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து கடந்த ஜூன் மாதத்தில் அவரை விடுவிப்பது பாதுகாப்பது என்று முடிவு செய்துள்ளது. ஆனால் இந்த முடிவுக்கு பல MPக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக DNA பரிசோதனை மூலம் கண்டுப்பிடிக்கப்பட்ட முதல் குற்றவாளி கொலின் பிட்ச்போர்க் ஆவார்.

Categories

Tech |