போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தவர்கோட்டை போக்குவரத்து பணிமனையில் மத்திய அரசை கண்டித்து சி.ஐ.டி.யு., எல்.பி.எப். தொழில் சங்கத்தைச் சார்ந்த தொழிலாளர்கள் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம் நடத்தினர்.
அந்தப் போராட்டத்தில் சி.ஐ.டி.யு. மண்டல தோழர் கார்த்திகேயன் தலைமையில் பழனியப்பன், ஆறுமுகம், சபாபதி, ரமேஷ் பாபு மற்றும் சி.ஐ.டி.யு., எல்.பி.எப். தொழிற்சங்கத்தினர் போன்றோர் கலந்து கொண்டனர்.