Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை” 22,630 நபர்களுக்கு தடுப்பூசி…. சுகாதாரத் துறையினரின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 22,630 நபர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்த மாவட்டத்தில் தற்போது வரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாக்க பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பெருந்துறை, பவானி, அந்தியூர், மொடக்குறிச்சி, கொடுமுடி, கோபி, சத்தியமங்கலம், தாளவாடி, நம்பியூர் உள்ளிட்ட மொத்தம் 127  இடத்தில் முகாம்கள் அமைக்கப்பட்டு 22 ஆயிரத்து 630 நபர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதற்காக பொதுமக்கள் ஆர்வத்துடன் அந்தந்த தடுப்பூசி முகாமிற்கு சென்று டோக்கன் மூலம் சமூகஇடைவெளியை கடைப்பிடித்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அதிலும் குறிப்பாக மாணவ- மாணவிகள் அதிக அளவில் தடுப்பூசி செலுத்துகின்றனர். எனவே தற்போது மாவட்டத்தில் தொடர்ந்து முகாம்கள் நடைபெற்று வருவதால் இதுவரையிலும் தடுப்பூசி செலுத்தாமல் இருக்கும் பொதுமக்கள் முகாம்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |