Categories
தேசிய செய்திகள்

ஜிஎஸ்டி வரி கிடையாது…. அப்பள பிரியர்களுக்கு வெளியான குட் நியூஸ்…!!!

ஜிஎஸ்டி வரி என்பது ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு விதமாக வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்தியா முழுவதுமாக உணவில் பயன்படுத்தப்படும் அப்பளத்திற்கு வெவ்வேறு வகையில் ஜிஎஸ்டி அளிக்கப்படுகிறது. அதன்படி அப்பளம் வட்டமாக இருந்தால் ஜிஎஸ்டி கிடையாது. சதுர வடிவில் இருந்தால் ஜிஎஸ்டி உண்டு என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் யாராவது நல்ல பட்டய கணக்காளர்கள் இதில் உள்ள தர்க்கத்தை புரிய வைத்தால் நல்லது என்று ஆர்பிஜி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைவர் அறிவித்ததையடுத்து இது வைரலாக பரவியது. இதற்கு மத்திய மறைமுக வரிகள் வாரியம், எந்த வடிவத்தில் எந்த பெயரில் இருந்தாலும் அவற்றிற்கு ஜிஎஸ்டி கிடையாது என்று விளக்கம் அளித்துள்ளது.

Categories

Tech |