Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“திருப்பணிக்கு உதவுங்கள்” குழந்தையை கடத்த முயன்ற பெண்கள்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

குழந்தையை கடத்த முயன்ற குற்றத்திற்காக 2 பெண்களுக்கு தலா 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள லைன்கொல்லை பகுதியில் கூலி தொழிலாளியான சத்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு சத்யராஜின் வீட்டிற்கு சீதா, அலமேலு என்ற இரண்டு பெண்கள் சென்றுள்ளனர். இந்நிலையில் தங்கள் பகுதியில் கட்டப்படும் கோவில் திருப்பணிக்கு உதவுமாறு 2 பெண்களும் சத்யராஜிடம் கூறியுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்து விட்டு சத்யராஜின் மனைவி வீட்டிற்குள் சென்ற பிறகு வெளியே நின்று கொண்டிருந்த அவர்களின் குழந்தையை 2 பெண்களும் கடத்த முயற்சி செய்துள்ளனர்.

அப்போது குழந்தையின் அழுகுரல் கேட்டு பொதுமக்கள் 2 பெண்களையும் மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி 2 பெண்களுக்கும் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர்களுக்கு 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |