14 வயதுடைய மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள திட்டக்குடி பகுதியில் வசிக்கும் 14 வயது மாணவி ஒருவர் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தாய் கூலி வேலை பார்பதற்காக கேரளாவிற்கு சென்றுள்ளார். இதனால் அந்த மாணவி தனது சகோதரர்களுடன் அதே பகுதியிலிருக்கும் சித்தப்பா சரவணன் வீட்டில் தங்கி இருந்துள்ளனர். அப்போது சரவணனின் மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்ற நிலையில் இதை பயன்படுத்திக் கொண்டு தூங்கிக்கொண்டிருந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
அதன்பின் பயந்து எழுந்த மாணவியை சரவணன் பாலியல் பலாத்காரம் செய்துயுள்ளார். பின்னர் இது பற்றி யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் சரவணன் மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன மாணவி இதுபற்றி யாரிடமும் சொல்லவில்லை. இதனையடுத்து சரவணன் மீண்டும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது தொடர்பாக மாணவி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சரவணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு இம்மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த நிலையில் விசாரணைகள் முடிவடைந்ததால் நீதிபதி எழிலரசி தீர்ப்பு வழங்கியுள்ளார். அந்த தீர்ப்பில் சரவணன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 7 வருடம் சிறை தண்டனையும் மற்றும் 3000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.