Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பவன் கல்யாணின் ‘பீம்லா நாயக்’… அதிரடியான டைட்டில் பாடல் இதோ…!!!

பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் பீம்லா நாயக் படத்தின் டைட்டில் பாடல் வெளியாகியுள்ளது.

மலையாள திரையுலகில் சச்சி இயக்கத்தில் பிரித்விராஜ், பிஜு மேனன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ஐயப்பனும் கோஷியும். தற்போது இந்த படம் தெலுங்கில் பீம்லா நாயக் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் பிஜு மேனன் நடித்த கதாபாத்திரத்தில் பவன் கல்யாணும், பிரித்விராஜ் நடித்த கதாபாத்திரத்தில் ராணா டகுபதியும் நடிக்கின்றனர். மேலும் நித்யா மேனன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பீம்லா நாயக் படத்தின் டைட்டில் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இந்த அதிரடியான டைட்டில் பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |