அழகு நிலையம் என்ற பெயரில் விபச்சாரம் நடத்திய 3 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள சேர்மன் சுந்தரம் நகரில் இருக்கும் அழகு நிலையத்தில் பிரச்சனை நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த அழகு நிலையத்தில் வாலிபர் ஒருவர் மற்றும் இளம்பெண்ணும் அரை குறை ஆடைகளுடன் இருந்துள்ளனர். பின்னர் பக்கத்து அறையை சோதனை செய்த போது அங்கு 2 பெண்கள் அரை குறை ஆடைகளுடன் அமர்ந்து இருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர்.
இதனையடுத்து அந்த வாலிபரை பிடித்து விசாரித்த போது அவர் புதுப் பாளையத்தில் வசிக்கும் 26 வயதுடைய இன்ஜினியர் என்பதும், அவர் ஒரு பெண்ணுடன் விபச்சாரத்தில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இவற்றை தொடர்ந்து விசாரணை செய்த போது புவனேஸ்வரி, மணிமாறன், ராஜ்குமார் ஆகிய 3 பேரும் இணைந்து அழகு நிலையம் என்ற பெயரில் இளம்பெண்கள் 3 பேரை வைத்து விபச்சாரம் செய்து வந்தது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபச்சாரத்தில் ஈடுபட்ட இன்ஜினியரை கைது செய்துள்ளனர். அதன்பின் விபச்சார தொழிலில் ஈடுபட்ட 3 பெண்களையும் காவல்துறையினர் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அழகு நிலையம் நடத்தி வந்த புவனேஸ்வரி, ராஜ்குமார், மணிமாறன் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.