ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் காபூல் விமான நிலையத்தில் தற்கொலை வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்துவதற்கு முன்பே அபே நுழைவுவாயிலில் மக்கள் குவிந்ததற்க்கு பிரித்தானிய அதிகாரிகள் தான் காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்த 15 ஆம் தேதி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். அதிலிருந்து ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து கடந்த 26 ஆம் தேதி காபூலில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தற்கொலை வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் தீவிரவாதிகள் நடத்திய அந்த தாக்குதலில் பிரிட்டிஷ் குடிமக்கள் உட்பட தோராயமாக 200 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து காபூல் விமான நிலையத்தில் தீவிரவாதிகளின் தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி பிரிட்டிஷ் தூதரகம் ஆப்கானிஸ்தான் மக்களை விமான நிலையத்தில் உள்ள அபே நுழைவு வாயிலுக்கு செல்லுமாறு எச்சரித்ததாக ஊடகம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது. அதன்பின் காபூல் விமான நிலையத்தில் தீவிரவாதிகளின் தாக்குதல் நடத்த வாய்ப்புகள் உள்ளது என பிரித்தானியா மற்றும் அமெரிக்கா மக்களை எச்சரித்து அபே நுழைவு வாயிலுக்கு செல்லுமாறு பிரிட்டிஷ் தூதரகம் அனுப்பிய மின்னஞ்சலை நாங்கள் பார்த்ததாக அந்த ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆப்கானிஸ்தர் ஒருவர் கூறியதாவது ” தீவிரவாதிகள் கடந்த 26 ஆம் தேதி விமான நிலையத்தில் நடத்திய தாக்குதல் குறித்து பிரித்தானியா மேற்கொண்ட பேச்சுவார்த்தை சிக்கலாகத்தான் முடிந்தது” என கூறியுள்ளார். பின்னர் கடந்த 22 ஆம் தேதி அதாவது தாக்குதல் நடத்துவதற்கு முந்தைய நாள் காபூலில் தீவிரவாதிகளின் தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதால் மக்கள் யாரும் விமான நிலையத்திற்குள் வரவேண்டாம் என பிரித்தானிய வெளியுறவு துறை அலுவலகம் மக்களை எச்சரித்துள்ளது. இந்த நிலையில் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் காபூல் விமான நிலையத்தில் தற்கொலை வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்துவதற்கு முன்பே மக்கள் அபே நுழைவாயிலில் குவிந்ததற்கு பிரித்தானிய அதிகாரிகள் தான் காரணம் என பல தரப்பிலிருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாக்கியுள்ளது. இதுகுறித்து பிரித்தானிய அரசு விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ளது.