ஆடு ஒரே நேரத்தில் ஈன்ற 6 குட்டிகளை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள மருதப்பபுரம் பகுதியில் சண்முகையா என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சண்முகையா தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றார்.
இவருக்கு சொந்தமான வெள்ளாடு ஒரே நேரத்தில் 6 குட்டிகளை ஈன்றுள்ளது. இவ்வாறு ஆடு ஒரே நேரத்தில் 6 குட்டிகளை ஈன்ற செய்தி கிராமத்தில் வேகமாக பரவியது. இந்த ஆட்டுக்குட்டிகளை அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.