மின் மோட்டாரை இயக்கும் போது மின்சாரம் தாக்கி விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் பகுதியில் விவசாயியான சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சேகர் தனது விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அங்கு மின் மோட்டாரை இயக்க முயற்சிக்கும் போது திடீரென சேகர் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதனால் சம்பவ இடத்திலேயே சேகர் உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று சேகரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.