மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சட்டமன்ற கூட்டம் நடைபெற்றபோது முதலமைச்சர் இதை பற்றி குறிப்பிட்டிருந்தார். மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. ஏழை மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு கிடைப்பதில் சிரமம் என்பதை குறிப்பிட்டிருந்தது. கடந்த மாதம் ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே ராஜன் தலைமையில் கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
அந்த குழு கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. இதற்கிடையில் உயர்மட்ட கொள்கையின் ஆய்வுசெய்து தலைமைச் செயலாளர் தலைமையில் உயர் அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.