பீஸ்ட் திரைப்படம் குறித்து மிகவும் உற்சாகத்தில் உள்ளதாக பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் நடிகை பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடியபோது தனது படங்கள் குறித்த சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, நான் நடித்த ராதே ஷ்யாம் படம் கூடிய விரைவில் வெளியாக உள்ளது. மேலும், பீஸ்ட் திரைப்படம் குறித்து மிகவும் உற்சாகத்தில் உள்ளதாகவும், அதுவும் தளபதி விஜய் கூட என்றும் கூறியுள்ளார்.