Categories
உலக செய்திகள்

பூமியில் ஏற்பட்ட பேரிடர் பாதிப்புகள்…. ஆய்வு நடத்திய உலக வானிலை மையம்…. அறிக்கையில் வெளியிட்ட தகவல்கள்….!!

உலக வானிலை மையம் நடத்திய ஆய்வில் காலநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்பட்ட பேரிடர்களில் சிக்கி கடந்த 50 ஆண்டுகளில் 2 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

பேரிடர் என்பது காலநிலை மாற்றத்தின் காரணமாக பூமியில் ஏற்படும் வறட்சி, பனிப்பாறைகள் உருகுதல், அதிகளவிலான வெப்பம், காட்டுத்தீ, நிலநடுக்கம், சுனாமி மற்றும் அதிகளவு மழை பொழிவு போன்றவைகள் ஆகும். இதனையடுத்து கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் பூமியில் ஏற்பட்ட பேரிடர்களில் சிக்கி 2 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளதாக உலக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து காலநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படும் பல்வேறு பேரிடர்கள் குறித்து தற்போது உலக வானிலை மையம் ஆய்வுகள் நடத்தி வருகின்றது. இதற்கிடையில் பேரிடர் பாதிப்புகள் குறித்து உலக வானிலை மையம் அறிக்கை ஓன்று வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியதாவது “உலக வானிலை மையம் நடத்திய  ஆய்வில் காலநிலை மாற்றத்தின் காரணமாக உருவாகும் பேரிடர்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றது. மேலும் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 11 ஆயிரம் பேரிடர் நிகழ்வுகள் கடந்த 1970 முதல் 2019 ஆம் ஆண்டுகளுக்கிடையில் ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது கடந்த 50 வருடங்களில் 2 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளனர். அதன்பின் 3.64 டாலர்கள் மதிப்பிலான பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக எதியோப்பியாவில் 1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட வறட்சியில் சிக்கி 3 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து 2005 ஆம் ஆண்டு ஏற்பட்ட சூறாவளியில் 163.61 டாலர்கள் மதிப்புடைய பொருட்சேதங்கள் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு காலநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்பட்ட பேரிடர்களில் சிக்கி கடந்த 50 ஆண்டுகளில் உயிரிழந்தவர்களில் 90 சதவீதம் மக்கள் வளரும் நாடுகளை சேர்ந்தவர் என்பதை சுட்டிகாட்டுகிறோம். இதுபோன்ற காலநிலை மாற்றத்தினால் எதிர்காலத்தில் பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும் என்பதனால் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளது.

Categories

Tech |