Categories
உலக செய்திகள்

நாங்கள் தருகின்றோம் ”75,000,000 K.G ” ஆப்கானுக்கு இந்தியா தாராளம்….!!

ஆப்கானிஸ்தானுக்கு உதவும் வகையில் 75 ஆயிரம் டன் கோதுமை வழங்கவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவின் அண்டை நாடான ஆப்கானிஸ்தான் நீண்ட நாள்களாக தலிபான் பயங்கரவாத அமைப்பின் பிடியிலிருந்து பாதிப்புக்குள்ளானது. அமெரிக்கப் படைகளை ஆப்கானிஸ்தானில் மேற்கொண்ட பயங்கரவாத நடவடிக்கை காரணமாகத் தலிபான் பயங்கரவாத இயக்கம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

அதைத் தொடர்ந்து நாடாளுமன்ற ஆட்சி அங்கு கொண்டுவரப்பட்டு ஜனநாயக ஆட்சி நடைபெற்றுவருகிறது. இதன் விளைவாகப் பல நாடுகளும் ஆப்கானின் முன்னேற்றத்திற்கு உதவிகளை மேற்கொண்டுவருகிறன.கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானுக்கு உதவும் வகையில் இந்தியா சார்பில் 11 லட்சம் டன் கோதுமை அனுப்பப்பட்டுள்ளது. ஈரானில் உள்ள சாபர் துறைமுகம் வழியாக இந்த உதவிகள் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக வரும் நவம்பர் மாதம் 75 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமையை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பிவைத்துள்ளது இந்தியா. இந்த அறிவிப்பை ஆப்கானிஸ்தானுக்கான இந்தியத் தூதர் வினய் குமார் தற்போது தெரிவித்துள்ளார்.கடந்த நான்கு ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான் குழந்தைகளின் மருத்துவ உதவிக்காக 40 லட்சம் அமெரிக்க டாலர் நிதியுதவி மேற்கொண்டுள்ளது இந்தியா.

Categories

Tech |